நாளை பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி, தியோமான் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், நவம்பர் 23 :

15வது பொதுத் தேர்தலுக்கான (GE15) கெடாவில் உள்ள பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கும், பகாங்கில் உள்ள தியோமான் மாநில சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 24) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து GE15 க்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது, அதாவது பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கு பக்காத்தான் ஹராப்பான் (PH) கட்சியைச் சேர்ந்த எம். கருப்பையா மாரடைப்பு காரணமாக தேர்தலுக்கு இரு நாட்கள் முன்னர் இறந்தார். அதே நேரம் தியோமான் சட்டமன்றத் தொகுதியின் பெரிகாத்தான் நேஷனல் (PN) கட்சி வேட்ப்பாளர் எம்.டி. யூனுஸ் ரம்லி. தேர்தல் வாக்குப்பதிவு நாளான நவம்பர் 19ஆம் தேதி காலை இருதயக் கோளாறினால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளைக் காலை 10 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

எவ்வாறாயினும், முன்னர் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை, ஆனால் அவர்கள் புதிய வாக்குச்சீட்டைப்பெற வேட்புமனு மையத்தில் இருக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் (EC) டிசம்பர் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நாளாகவும், டிசம்பர் 3-ஆம் தேதியை முன்கூட்டியே வாக்களிக்கவும் நிர்ணயித்துள்ளது. அத்தோடு வேட்பாளர்களுக்கு 13 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி டிசம்பர் 6 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here