நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மழையையும் பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை முதலே ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அதனால் ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, “ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவர் சார்பாக எல்லாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து ரசிகர்களைச் சந்தித்திருப்பார். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம் என்று கூறினார்.