உரை நிகழ்த்தியே $1.67 மில்லியனுக்கு மேல் சம்பாதித்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர்

கடந்த  செப்டம்பரில் பிரிட்டனின் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, உரை நிகழ்த்தியன் மூலம் போரிஸ் ஜான்சன் £1 மில்லியனுக்கு மேல் சம்பாதித்துவிட்டார் என்று, பிரிட்டன்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலனுக்கான அதிகாரபூர்வ பதிவகம் தெரிவித்துள்ளது.

அண்மைய மாதங்களாக நியூயார்க்கில் வங்கியாளர்கள், அமெரிக்காவில் காப்புறுதி நிறுவன ஊழியர்கள் முன்னிலையிலும் போர்ச்சுகலில் சிஎன்என் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த உச்சநிலை மாநாடு, இந்தியாவில் வேறொரு நிகழ்ச்சியிலும் உரை நிகழ்த்தினார்.

ஒவ்வொரு முறையும் ஜான்சன் £215,000 முதல் £277,000 வரை கட்டணம் வசூலித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி நலனைப் பட்டியலிடும் பிரிட்டன் நாடாளுமன்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ ஆவணத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here