கோலாலம்பூர்:
வரும் சனிக்கிழமை (ஜூன் 29) நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் “Demo Rakyat Lawan Anwar” எனும் வீதி போராட்டம் சட்டவிரோதமானது என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்துள்ளார்.
Rakyat Lawan Anwar’ வீதி போராட்டத்தை நடத்துவதற்கு கடந்த ஜூன் 14 ஆம் தேதி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையிடம் மனு செய்த போதிலும் ஆட்சேப போராட்டம் நடத்தப்படும் இடம் புத்ராஜெயா கார்ப்பரேஷனுக்கு சொந்நமான இடம் என்பதால் அவர்களிடம் அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதால் அது சட்டத்திற்குப் புறம்பாக உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
எனவே சனிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் ருஸ்டி அறிவுறுத்தினார்.
மேலும் அப்பேரணியில் கலந்துகொள்ளுமாறுமக்களைக் கேட்டுக்கொள்ளும் ஒரு வைரல் வீடியோ தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றும், அந்தவீடியோ குறித்து 85 போலீஸ் புகார்களை காவல்துறை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.




















