மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங்சான் சூகி ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

இதையடுத்து ஆங்சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்களுக்கு அடுத்தடுத்து தண்டனை வழங்கப்பட்டன. இதில் இதுவரை அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பு இன்று மியான்மர் ராணுவ கோர்ட்டில் வழங்கப்பட்டது.

அதன்படி ஆங்சான் சூகிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு மொத்தம் 31 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here