சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம்; ஒரு மணி நேரத்திற்கு 4,500 பேர் 18-ம் படி ஏற அனுமதி

திருவனந்தபுரம் :

சபரிமலையில் வரும் ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருவதால், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

இன்று புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, அதிக அளவிலான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

ஆலய பகுதியில் நெரிசலை தவிர்க்கும் விதமாக ஒரு மணி நேரத்திற்கு 4,500 பேர் மட்டும் 18-ம் படி ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே வரும் 11-ம் தேதி இரவு எருமேலியில் பேட்டைத்துள்ளல் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும் என்றும், ஜனவரி 19-ந்தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here