நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற ‘பிளாடிரான்’ கட்டிடம் 190 மில்லியன் டாலருக்கு ஏலம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 22 மாடிகளை கொண்ட ‘பிளாடிரான்’ என்ற வானளாவிய கட்டிடம் உள்ளது. கடந்த 1902-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தன் மெல்லிய, முக்கோண வடிவத்திற்கு மிகவும் பிரபலமானது.

நியூயார்க்கின் அடையாளமாக திகழும் இந்த கட்டிடம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடம் பல்வேறு கைகளுக்கு மாறி இறுதியாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் கைக்கு வந்தது.அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ‘பிளாடிரான்’ கட்டிடத்தை ஏலம் விட முடிவு செய்தது.

இதை தொடர்ந்து நியூயார்க்கை சேர்ந்த தனியார் ஏல நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏலத்தை நடத்தியது. இதில் ஆபிரகாம் டிரஸ்ட் என்ற முதலீட்டு நிதியத்தின் சார்பில் ஏலத்தில் பங்கேற்ற அதன் நிர்வாக பங்குதாரர் ஜேக்கப் கார்லிக், 190 மில்லியன் டாலருக்கு ($190 million) ‘பிளாடிரான்’ கட்டிடத்தை ஏலத்தில் எடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here