ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்புச் சட்டம் பாமாயில் ஏற்றுமதியை பாதிக்காது – மலேசிய நிறுவனங்கள் உறுதி

கோலாலம்பூர்: காடழிப்புடன் தொடர்புடைய பொருட்களை தடை செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய சட்டத்தால் பெரிய பாமாயில் நிறுவனங்கள் பாதிக்கப்படாது என்று மலேசியாவின் இரண்டு பெரிய செம்பனைப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் இன்று தெரிவித்தனர்.

காடழிப்புடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதியை தடை செய்யும் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத் இந்த ஆண்டு நிறைவேற்றியது, இது லிப்ஸ்டிக் முதல் பீட்சா வரை அனைத்திலும் பயன்படுத்தப்படும் பாமாயிலை அதாவது அதன் ஏற்றுமதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முதல் இரண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் பாமாயில் ஏற்றுமதியாளர்களான மலேசியா மற்றும் இந்தோனேசியா, இந்த சட்டம் பாரபட்சமானது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் சந்தையைப் பாதுகாக்கும் வகையிலும் உள்ளது என்றும் கூறியுள்ளன.

இது தொடர்பில் இன்று (ஜூன் 12) நடந்த ஒரு தொழில்துறை மாநாட்டில், மலேசிய பாமாயில் உற்பத்தியாளர்களான Sime Darby Plantation Bhd (SIPL.KL) மற்றும் United Plantations Bhd (UTPS.KL) ஆகிய நிறுவனங்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு காடுகள் அழிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடாததால் புதிய சட்டத்திற்கு இணங்குவதில் தமக்கு எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்தனர்.

“மலேசியாவில் உள்ள பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பே காடழிப்புக்கு எதிராக கையெழுத்திட்டன. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் முதிய சட்டத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை,” என்று யுனைடெட் பிளான்டேஷன்ஸின் தலைமை நிர்வாகி, கார்ல் பெக் நீல்சன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில், சிறு விவசாயிகளின் முயற்சி குறித்து நிறுவனம் கவலை கொண்டுள்ளதாக சைம் டார்பி பிளான்டேஷனின் குழும நிர்வாக இயக்குனர், முஹமட் ஹெல்மி ஒத்மான் பாஷா கூறினர்.

சிறு உற்பத்தியாளர்களில் பலர் பெரிய உற்பத்தியாளர்களின் விநியோகச் சங்கிலிகளுக்கு ஆதரவாக இருக்கின்றனர். புதிய சட்டத்தின்படி அவர்களின் அனைத்து பாமாயில் உற்பத்தியையும் கண்டுபிடிப்பது சிலநேரங்களில் கடினமாக இருக்கும். ஆனால் பெரிய நிறுவனங்கள் ” இச் சட்டத்திற்கு இணங்குவதற்கு பெரிய சிக்கல்கள் இருக்காது,” என்று அவர் கூறினார்.

ஆனாலும் இந்த EU சட்டம், தயாரிப்பாளர்கள் தங்கள் பொருட்கள் எப்போது, ​​எங்கே உற்பத்தி செய்யப்பட்டன என்பதைக் காட்டும் உரிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும், அத்தோடு 2020 க்குப் பிறகு காடுகள் அழிக்கப்பட்ட நிலத்தில் அவை வளர்க்கப்படவில்லை என்ற “சரிபார்க்கக்கூடிய” தகவலையும் அவர்கள் வழங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here