சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான அல்- குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு கண்டம் தெரிவிக்கும் பொருட்டு, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்திற்கு தீ வைக்கப்பட்டது.
இன்று அதிகாலை நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சுவீடன் தூதரகத்தை முற்றுகையிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பாக்தாத் தூதரகப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக சுவீடன் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. தாக்குதலை வன்மையாகக் கண்டித்த அமைச்சு, ஈராக்கிய அதிகாரிகள் தூதரகங்களைப் பாதுகாக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஷியா முஸ்லிம் சமயகுரு முக்தாடா சதரின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்ததாக, அவரைச் சார்ந்த டெலிகிராம் குழுவின் பதிவுகள் காட்டுகின்றன.
சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள ஈராக்கியத் தூதரகத்திற்கு வெளியே வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சுவீடன் காவல்துறையினர் அனுமதி அளித்தனர். அந்தக் கூட்டத்தில் இருவர் பங்குபெறவிருந்ததாகக் காவல்துறை வழங்கிய அனுமதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், குறித்த பாவகாரியத்துல் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று சுவீடனுக்கு உலக இஸ்லாமிய நாடுகள் நெருக்குதல் அளித்து வருகின்றன.




















