சமூக ஆர்வலர் சித்தி காசிமின் காரில் மர்மப்பொருள்; பங்சார் வாகன சேவை மையத்திற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு

பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சித்தி காசிமினின் காரில் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொருளை ஆய்வு செய்வதற்காக வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு (UPB) இங்குள்ள ஜலான் மரோஃப், பங்சாரில் உள்ள வாகன சேவை மையத்திற்கு வந்தது.

குறித்த வாகன சேவை மையம் அருகில் உள்ள பகுதியும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 100 மீட்டர் வரையான பகுதியும் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.

மேலும் வாகன சேவை மையத்தில் உள்ள வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை அங்கிருந்து நகர்த்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைனும் இருந்தார்.

முன்னதாக, சித்தி காசிம் தனது காரில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் வைக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் கூறினார். அதாவது இன்று நண்பகல் 12 மணியளவில் தனது காரை வாகன சேவை மையத்தில் அனுப்பியபோது, டயரில் வைக்கப்பட்டிருந்த மர்மப் பொருளை கவனித்ததாக சித்தி காசிம் கூறினார்.

அதனைத்தொடர்ந்து போலீசாரின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அவ்விடத்திற்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here