கணவரின் கொடுமையால் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை

­டிம்பிள் கபாடியா ‘பாபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். டிம்பிள் பாபியில் தனது அப்பாவி தோற்றம், பிகினி கவர்ச்சி ஆடை மற்றும் பெரிய பழுப்பு நிற கண்களால் பார்வையாளர்களை கிறங்க வைத்தார். ‘காஷ்’, ‘த்ரிஷ்டி’, ‘ருடாலி ‘உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர். தமிழில் கமல்ஹாசனுடன் ‘விக்ரம்’ திரைப்படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

டிம்பிள் கபாடியா தனது 16 வயதில் 1973 ஆம் ஆண்டு ராஜ் கபூரால் “பாபி” படத்தில்றி முகப்படுத்தப்பட்டார். படம் வெற்றி பெற்ற போதும் அதே ஆண்டில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ராஜேஷ் கண்ணாவை திருமணம் செய்து கொண்டார். ராஜேஷ் கண்ணா இந்தியாவின் சூப்பர் ஸ்டார்.அவரது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்தது. 1973 ஆண்டில் இருந்து ராஜேஷ் கண்ணாவின் பல படங்கள் தோல்வியடைந்து அவரது நட்சத்திர அந்தஸ்து சரிந்து கொண்டிருந்த போது அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

தனது தொழில் அழிந்து வருவதைக் கண்டு, ராஜேஷ் கண்ணா மது மற்றும் சிகரெட் பழக்கத்தில் மூழ்கத் தொடங்கினார். அதே சமயம் டிம்பிள் கபாடியாவால் கணவரை இந்த நிலையில் பார்க்க முடியவில்லை. பலமுறை அவரும் நடிகரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

இந்த நேரத்தில் ராஜேஷ் கண்ணாவுக்கும் டிம்பிளுக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமடைந்து வந்ததாக கூறப்படுகிறது, நடிகர் தனது மனைவியை அடித்து உதைத்தார். இதை தொடர்ந்து தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்வதற்கு முன்பு, மாடலும் நடிகையுமான அஞ்சு மகேந்திராவை ராஜேஷ் கண்ணா காதலித்து வந்தார். இருவரும் ஏழு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். அப்போது நடிகர் அவரை திருமணம் செய்ய விரும்பியபோது. நடிகை மறுத்துவிட்டார் ஏனென்றால் அந்த நேரத்தில் அவர் தனது தொழிலில் கவனம் செலுத்த விரும்பினார். இதனால் ராஜேஷ் கண்ணா மிகவும் நொந்து போனார். பின்னர் ராஜேஷ் டிம்பிளை சந்தித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தன்னுடைய இரு மகள்கள் டிவிங்கிள் கண்ணா மற்றும் ரிங்கி கண்ணா ஆகியோரை வளர்ப்பதற்காக டிம்பிள் தன்னுடைய நடிப்புத் தொழிலை விட்டு பன்னிரண்டு ஆண்டுகள் விலகி இருந்தார். 1982ஆம் ஆண்டில் ராஜேஷ் கண்ணாவிடம் இருந்து விவாகரத்து பெற்று 1984ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

ஓராண்டுக்கு பிறகு சாகர் படம் அவரை மீண்டும் பிசியாக்கியது. கமல்ஹாசன், ரிஷிகபூர் ஆகியோர் நடித்த அப்படத்தில் கபாடியா சிறிது நேரம் மேலாடையற்ற காட்சியில் தோன்றினார். அந்த காட்சி அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இது அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்திக் கொள்ள காரணமாக அமைந்தது. தற்போது 66 வயதாகும் டிம்பிள் கபாடியா டிவி தொடர்களிலும்,வெப் தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

டிம்பிள் கபாடியா குஜராத்தி தொழிலதிபரான சுனிபாய் கபாடியா-பிட்டி தம்பதிக்கு 1957ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி பிறந்தார். டிம்பிள் கபாடியா செல்வச்செழிப்பு மிக்க இஸ்மாயிலி கோஜா குடும்பத்தை சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் இந்து மதத்தை தழுவியர்கள் என்றாலும் இஸ்மாயிலி முஸ்லிம்களின் நிஜாரி பிரிவின் ஆன்மீகத் தலைவர் ஆகா கானை மதவழிகாட்டியாக கருதினர். டிம்பிள் என்ற பெயருக்கு அரபு மொழியில் நம்பிக்கைக்குரியவர் என்று பொருள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here