வெளிநாட்டு மாணவர்கள் குடும்பத்தை அழைத்துவருவதை நிறுத்துகிறது பிரிட்டன்

லண்டன், ஆகஸ்ட்டு 15:

பிரிட்டனில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களின் குடும்பத்தாரை அங்கு அழைத்துவருவதை நிறுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடுகிறது.

தற்போது பிரிட்டனில் முதுகலைப் பட்டம் பயிலும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையையும் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துச் செல்லலாம்.

இந்த திடடம் அடுத்த ஆண்டு முதல் அமலாக்கப்படவுள்ளது.

பிரிட்டனில் தங்கச் செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த சட்டத்தினால் குறிப்பாகச் சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆக அதிகமாகப் பாதிக்கப்படுவர்.

இருப்பினும் ஆராய்ச்சி சார்ந்த முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்குப் புதிய மாற்றம் பொருந்தாது என்றும், அதிகமான வெளிநாட்டவர் பிரிட்டனில் படிக்கவேண்டும் என்று விரும்புவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு கூறியது.

எனினும் அவர்களைச் சார்ந்து வருவோரின் எண்ணிக்கை கட்டுப்படியான அளவைக் கடந்துவிட்டதாக அது சொன்னது.

சென்ற ஆண்டு அத்தகைய சுமார் 136,000 பேருக்கு விசா வழங்கப்பட்டது. இது 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 8 மடங்கு அதிகம். அமேலும் ந்த விசா வைத்திருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

-AFP

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here