ரூ. 4,000 கோடி மோசடி… அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இந்திய வம்சாவளியை சேர்ந்த மினல் படேல் என்பவர் அமெரிக்காவில் லேப் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் மருத்துவ ஆய்வகம் நடத்தி வருகிறார். இங்கு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் காப்பீட்டு திட்டத்தை ஏமாற்றும் வகையில் இடைத் தரகர்களுடன் சேர்ந்து, தேவையே இல்லாமல் நோயாளிகளுக்கு டெஸ்ட் எடுத்தல், சில மருத்துவர்கள், மருத்துவ கால் சென்டர்களுடன் இணைந்து மோசடி செய்து வந்துள்ளார்.

அந்த வகையில்  3 ஆண்டுகளில் மட்டும் ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு மினல் படேல் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. 2016 முதல் 2019 வரையிலான கால கட்டத்தில் இந்த மோசடி நிகழ்ந்திருக்கிறது. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் சுமார் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மினல் படேலுக்கு முறைகேடான வழியில் நிதி கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here