சிங்கப்பூர்:
மலேசியாவில் அதிகமான தொழிலாளர்கள் Cosway கடந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்வதால், ஜொகூர் பாருவில் உள்ள காபி கடைகள் மற்றும் உணவகங்களில் கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் குறைந்த அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், குறைந்த பண மதிப்பீடு சில மலேசியர்களைச் சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல வழி வகுத்துள்ளது. நல்ல சம்பளம் பல மலேசியர்களைச் சிங்கப்பூர் நாட்டிற்குக் கவர்ந்து இழுத்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.41 ஆக குறைந்தது. ஆனால் ஜூலையில், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.48 ரிங்கிட் என்ற மிகக் குறைந்த விலைக்கு மலேசிய ரிங்கிட் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, S$1 முதல் 3.44 ரிங்கிட் வரை இருந்துள்ளது.