போர்ட்டிக்சன்:
கடந்த வியாழக்கிழமை போர்ட்டிக்சன் நகரில் பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில்,நான்கு வயதுச் சிறுவன் உயிரிழக்கக் காரணமான 33 வயது சிங்கப்பூர்நாட்டு கார் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரர் சென்ற பென்ஸ் கார், அச்சிறுவனும் அவனுடைய தந்தையும் சென்ற மோட்டார்சைக்கிள்மீது மோதியதாகக் கூறப்பட்டது.
விபத்தில் காயமடைந்த முகமட் ஷகேஸி இமான் முகமட் ஷஸ்ரேன் என்ற அச்சிறுவன் போர்ட்டிக்சன் மருத்துவமனையில் உயிரிழந்தான் . அவனுடைய 26 வயது தந்தைக்கு வலது தோளிலும் வலது காலிலும் எலும்புமுறிவு ஏற்பட்டது.
காரை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரருக்கு காயமெதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், கைதான சிங்கப்பூரரை இன்று ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றமிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு இரண்டு முதல் பத்தாண்டுகள் வரை சிறையும் 5,000 ரிங்கிட் முதல் 20,000 ரிங்கிட்வரை அபராதமும் விதிக்கப்படலாம்.









