அதிமுகவும் பாஜகவும் கணவன் மனைவி உறவுதான்.. அதுக்காக தினமும் ஐ லவ் யூ சொல்ல முடியாது

மயிலாடுதுறை:

பாஜக, அதிமுக உறவு என்பது கணவன் மனைவி போன்றதுதான், அதற்காக தினமும் ஐ லவ் யூ சொல்ல முடியாது என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சனாதன தர்மம் நிலையானது. வெளி நாட்டு ஆய்வாளர் மேக்ஸ் மூல் ஆய்வில் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதுதான் சனாதனம் என்கிறார். வள்ளுவர் தனது திருக்குறளில் கூட 4 வகையான ஜாதிகளை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்தெல்லாம் வைரமுத்துவுக்கு தெரியவில்லை.

அதனால்தான் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு திருவள்ளுவரை வைத்து பதில் அளித்துள்ளார். இந்தியாவை சிதைக்க வேண்டும் என்பதற்காகவே “இந்தியா” கூட்டணி உருவாக்கியுள்ளது. காங்கிரஸின் உண்மையான முகம் தற்போது தெரிய வந்துள்ளது. டெங்குவை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய இந்தியாவின் 80 சதவீத பெரும்பான்மை மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்பது போல் உதயநிதி பேசியுள்ளார்.

உதயநிதிக்கு எதிராக பாஜக சார்பில் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்படும். உதயநிதி பேசியதை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்ப்போம். 13 ஆண்டுகளாக வீட்டு வாடகை கொடுக்காத சீமான் ஒரு பிராடு, இரண்டு லட்சுமிகள் புகார் கொடுத்ததுமே முழு சூரிய முகியாக மாறி திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்றார்.

பாஜக மற்றும் அதிமுக இடையிலான தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கணவன் மனைவிக்கு தினமும் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்ற அவ சியம் இல்லை. பாஜக அதிமுக உறவு என்பது கணவன் மனைவி போன்றது என கூறியுள்ளார். பாஜக இடையே கூட்டணி இருப்பதாக சொல்லப்பட்டாலும் இரு தரப்பினரும் விமர்சனங்களை மாறி மாறி வீசுகிறார்கள்.

அந்த அடிப்படையில்தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷாவும் முக்கியம் என்றேன். இதற்கு அண்ணாமலையோ நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என கூறியிருக்கிறார். அரசியலில்அண்ணாமலை ஒரு கத்துக் குட்டி என எல்லோருக்கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஒரே ஆண்டில் தலைவராக பதவி வகித்து வருகிறார். ஆனால் நான் அப்படியில்லை. அதிமுக தொண்டர் வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகியிருக்கிறேன் என செல்லூர் ராஜு விமர்சனம் செய்திருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் செய்ததால் சிறைக்கு சென்றார் என்று அண்ணாமலை ஒரு பேட்டியில் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. எனினும் ஒரே நாடு ஒரே தேர்தல் உள் ளிட்ட விஷயங்களுக்கும், சனாதனம் குறித்து உதயநிதி கூறிய கருத்தை எதிர்த்தும் பாஜகவுக்கு தனது ஆதரவை அதிமுக காட்டி வருகிறது. எனினும் தேர்தலின் போது தான் கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து தெரியவரும். ஏனெனில் அதிமுகவிடம் பாஜக நிறைய தொகுதிகளை எதிர்பார்க்கிறதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here