பருத்தி வீரனுக்குப் பிறகு ஜப்பானில்தான் இது மாஸாக இருக்கும்; நடிகர் கார்த்தி

ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ளது ‘ஜப்பான்’. தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாக இருக்கும் நிலையில், படம் குறித்து நடிகர் கார்த்தி பேட்டி கொடுத்திருக்கிறார்.

நடிகர் கார்த்தி
அதில் ‘ஜப்பான்’ என்ற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே எனக் கேட்கப்பட்டது. அதற்கு, நடிகர் கார்த்தி “ஆம்! ஆனால், அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை. இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கியிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம்” என்றார்.
நடிகர் கார்த்தி
’சிறுத்தை’ படத்தின் ராக்கெட் ராஜாவுக்கும் ‘ஜப்பா’னுக்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கப்பட்டது. “மக்களுக்குக் கெட்டவனாக நடித்தால் பிடிக்கிறது என்று நினைக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏனென்றால் அதன் தன்மை அப்படி. அந்த சுதந்திரம் ராக்கெட் ராஜாவிலும் இருந்தது, இதிலும் இருக்கிறது. அதனால் இரண்டையும் ஒப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். பருத்தி வீரனுக்குப் பிறகு ஒரு கதாபாத்திரம் பேசும் எல்லா வசனங்களும் மாஸாக இருப்பது ஜப்பானில் தான்.
நடிகர் கார்த்தி

அந்த தோற்றம் முடிவு செய்தவுடனேயே எனக்கு பாதி நம்பிக்கை வந்துவிட்டது. ஒரு நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அந்தத் தோற்றத்தில் தெருவில் நடந்தேன். சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்து ’என்ன சார் புள்ளீங்கோ மாதிரி இருக்கீங்க’ என்று கேட்டனர். ‘அவங்களைப் பாத்துதான்யா காப்பி அடிச்சேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here