இங்கிலாந்தில் புது வகை கொரோனா: தடுப்பூசியை வேகப்படுத்துவதில் அரசு மும்முரம்

லண்டன்:

ங்கிலாந்தில், கொரோனா பெருந்தொற்றின் அடுத்த மாறுபாடு (BA.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதார துறை கண்டறிந்தது. இதனையடுத்து அத்துறை, குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கி உள்ளது.

இது முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குவதாக இருந்தது. “முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், வீட்டிலேயே இருந்து வருபவர்களுக்கும் இந்த வாரத்தில் இருந்து, அதிக பாதிப்புக்குள்ளாக கூடிய மற்றவர்களுக்கு அக்டோபர் மாதத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும்” என இங்கிலாந்தின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கி விட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“கொரோனா வைரஸ் BA .2.86 மாறுபாட்டின் பரவும் தன்மை, தாக்கும் தீவிரம் மற்றும் மருந்துகளுக்கு எதிராக போரிடும் சக்தி ஆகியவை குறித்து போதுமான தரவுகள் இல்லாததால், இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது,” என இங்கிலாந்தின் தேசிய சுகாதார பாதுகாப்பு முகமையின் மருத்துவர் ரேணு பிந்த்ரா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here