பாதசாரிகள் நடைபாதையை தடுத்தது உட்பட பல குற்றங்களுக்காக 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் -DBKL

கோலாலம்பூர்:

சாலையில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தியதாக 25 மோட்டார் சைக்கிள்களை கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தினரால் (DBKL) நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

DBKL அமலாக்க அதிகாரிகள் நகர மையத்தில் உள்ள பல்வேறு ஹாட் ஸ்பாட்களில் தாவது ஜாலான் அம்பாங், ஜாலான் பி. ராம்லீ மற்றும் பெர்சியாரன் KLCC, ஜாலான் பகாங்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 35 தண்டங்களும் விதிக்கப்பட்டன.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் 1959 உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை வாகன உரிமையலர்கள் மீறியுள்ளனர் என்று ஒரு DBKL அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பான அமலாக்க வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, இது நேற்று வைரலானது.

DBKL இன் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here