சலவைக் கூடத்தில் நாயைக் கொண்டு வந்ததற்காக திட்டு வாங்கிய நபர்- மலாக்காவில் சம்பவம்

மலாக்கா:

மீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்,  சீன இளைஞர் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயைச் சலவை செய்யும் அறைக்குள் கொண்டு வந்ததற்காக அங்கிருந்த மலாய்க்காரர் என நம்பப்படும் ஒருவர் அவரை திட்டியதை காணமுடிகிறது.

இது அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதத்திற்கு இட்டுச்சென்றது.

இந்நிலையில் குறித்த சீன இளைஞன் தனது செல்லப்பிராணியைப் பராமரிக்க வீட்டில் யாரும் இல்லை எனவும் அதனால்தான் தன்னோடு தன் செல்லப்பிராணியாக நாயையும் கொண்டு வந்தாக விளக்கினார்.

இருப்பினும், அந்த வளாகத்தில் நாய்கள் மற்றும் பன்றிகள் தடைசெய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பூனைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று மலாய்க்காரர் வலியுறுத்தினார்.

இது இரு நபர்களுக்கு இடையே சூடான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது, சீன இளைஞன் பூனைகளை அனுமதிப்பதில் சரி என்றால், நாய்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் முரண்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு மலாய்க்காரர் பூனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை, ஆனால் நாய்கள் மற்றும் பன்றிகள் எங்களது மதத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கூறினார்.

இந்த வாக்குவாதம் இறுதியில் நிலைமை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பது காணொளியில் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து சலவைத் துறை நிர்வாகம் எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here