சீனச் சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்கு விசா இன்றி பயணிக்கலாம்

சீனாவிலிருந்து தாய்லாந்துக்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கு நேற்று முதல் விசா தேவையில்லை என்று தாய்லாந்து அறிவித்துள்ளது.

மேலும் இந்த சிறப்பு சலுகை கஜகஸ்தானிலிருந்து வரும் பயணிகளுக்கும் பொருந்தும் என்றும், இத்திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பொருளியல் வளர்ச்சிக்காகத் தாய்லாந்துப் பிரதமர் செட்டா தர்வீசினின் (Settha Thavisin) அமைச்சரவை அந்தத் தற்காலிகத் திட்டத்தை நடப்புக்குக் கொண்டுவந்துள்ளது.

புதிய நடைமுறையின் கீழ் சீனாவிலிருந்தும் கஜகஸ்தானிலிருந்தும் வரும் பயணிகள் 30 நாள்கள் வரை தாய்லாந்தில் தங்கியிருக்கலாம்.

கோவிட் -19 வைரஸ் பரவலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் தாய்லாந்துக்குச் சீனாவிலிருந்து அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர். அதாவது 2019ஆம் ஆண்டு மட்டும் சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 11 மில்லியன் பேர் தாய்லாந்துக்கு தந்திருந்தனர் என்று கூறப்படுகிறது.

எனவே இப்புதிய நடைமுறையால் ஆண்டிறுதிக்குள் 5 மில்லியன் பயணிகளை ஈர்க்க முடியும் என்று தாய்லாந்து நம்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here