நாட்டின் சாலைப் பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாகவே உள்ளன-போக்குவரத்து அமைச்சர்

நீலாய்:

லோரி ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் நாட்டின் சாலை பாதுகாப்புச் சட்டங்கள் கடுமையாகவே உள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் அந் தோணி லோக் கூறினார். நாட்டின் பாதுகாப்புச் சட்டங்கள் கடுமையாக இல்லை என சில தரப்பினர் கூறி வருவதை அவர் மறுத்தார்.

போக்குவரத்து அமைச்சின் அமலாக்கப் பிரிவு எந்நேரத்திலும் தனது சோதனையை நடத்தி வருகிறது.சில தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந் துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.தற்போது நாட்டின் சாலை பாதுகாப்புச் சட் டங்கள் மிகவும் கடுமையாகவே உள்ளது. அதேபோல் தரை பொது சட்டமும் கடுமை யாகவே உள்ளது என்றார்.

வாகனமோட்டிகள் குற்றம் புரிந்தால் அவர்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம், சிறைத்தண்டனை உட்பட அவர்களின் வாகனமோட்டும் லைசென்ஸும் ரத்து செய்யப் படும் என நேற்று போக்குவரத்து அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அண்மையில் புத்ராஜெயாவில் லோரி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் மரண முற்ற சம்பவம் குறித்து இக்காத்தான் எனப்படும் சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தாய் கருத்துரைத்தது குறித்து அவர் இவ்வாறு கூறினார்.  லோரி ஓட்டுநர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டான்ஸ்ரீ லீ லாம் தாய் கேட்டுக் கொண்டிருந்தார்.

லோரி ஓட்டுநர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதான காரி யமல்ல என்பதை ஒப்புக் கொண்ட அமைச்சர், எனினும் லோரி ஓட்டுநர்களுக்கு எதி ராக சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரி வித்தார். நாட்டில் தற்போது சாலை விபத்துகள் நிகழ்ந்து வருவது குறித்து மக்கள் மிக வும் அச்சம் கொண்டிருந் தாலும்கூட, அரசாங்கம் அவர்களுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுவது நியாயமில்லை என்றார்.

நாங்கள் லோரிகளுக்கு சீல் வைத்தப் பின்னர் அவர்களின் வாகன மோட்டும் லைசென்ஸ்சையும் ரத்து செய்துள்ளோம். இது மிகவும் கடுமையான நடவடிக்கை யாகும். இது மக்களுக்கு தெரியாமல் சாலை போக்கு வரத்து இலாகா எந்தவித நடவ டிக்கையையும் எடுக்கவில்லை என கூறி வருகின்றனர் என்றார். லோரி ஓட்டு நர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கை குறித்து தமது அமைச்சு  லோரி உரிமையாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிரம் பான் நாடாளு மன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here