புகைமூட்டம்: பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

கோலாலம்பூர்:

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் பல வட மாநிலங்களில் காற்று மாசுக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற அளவைப் பதிவு செய்ததால் புகைமூட்டம் காணப்படுகிறது.

கோலாலம்பூரில் காற்று மாசுக் குறியீடு சராசரியாக API.154.5 ஆக இருந்தது, செராசில் 155 ஆகவும், பத்து மூடா 153 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேநேரத்தில் சிலாங்கூரில் காற்று மாசுக் குறியீடு சராசரியாக 127.4 ஐக் காட்டியது, பெட்டாலிங் ஜெயா மிக மோசமாக 153 ஆகவும், கிள்ளான் குறைந்தபட்சம் 88 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும் ஆரோக்கியமற்ற API அளவுகள் 101 மற்றும் 200 க்கு இடையில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் காற்றின் தரத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here