19வது ஆசிய விளையாட்டுப் போட்டி: இரண்டாவது தங்கப் பதக்கத்தை பெற்றது மலேசியா

ஹாங்சோ:

சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அங்குள்ள லோட்டஸ் திடலில் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.

மலேசியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை மகளிருக்கான பாய்மரப்படகு போட்டியில் நூர் ஷஸ்ரின் முகமட் லத்திப் வென்ற நிலையில், நேற்று மலேசியா இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

ஈக்குவஸ்டிரின் பிரிவில் களமிறங்கிய தேசிய வீரர் குவாபில் அம்பாஅம்பாக் முஹமட் 75.780 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்ததை தட்டிச் சென்றார்.

முன்னதாக 5 ஆசியப் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது அவர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here