மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட சமந்தா…

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் சமந்தா. தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் இடம் பிடித்தார் சமந்தா. இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017  திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா தமிழ் தெலுங்கு என பட்டையை கிளப்ப தொடங்கினார்.

புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்லறீயா மாமா” பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார் சமந்தா. சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா  2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதனை தொடர்ந்து அந்த ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாகவே சமந்தாவிற்கு அமைந்தது. ஜிம் ஒர்கவுட்டில் மரண மாஸ் காட்ட தொடங்கிய சமந்தா மயோசிட்டிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டார். சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் அவர் மனதளவிலும் சோர்ந்திருந்தார். இதனால் விஜய் தேவர்கொண்டா உடன் சமந்தா நடித்து வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சிகிச்சைகளுக்கு பிறகு கம் பேக் கொடுத்த சமந்தா படப்பிடிப்பை தொடங்கினார். வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடித்து முடித்தார்.
குஷி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் நடிப்பதில் இருந்து ஒரு வருடம் சமந்தா பிரேக் எடுக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் குஷி படம் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் புகைப்படத்தை அவரே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து,  என்ன காரணத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். தனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டரின் நன்மைகள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

இது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது, இதய அமைப்பு சரியாக செயல்பட வைக்கிறது மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது என குறிப்பிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here