TVET தொழில் திறன் கல்வி திட்டம் தொடர்பில் அதிகமாக மக்களிடம் பகிருங்கள்; மனிதவள அமைச்சர் வேண்டுகோள் 

மனிதவள அமைச்சின் கீழ் வழங்கப்படும் TVET தொழில் திறன் கல்வி தொடர்பான செய்திகளை அதிக அளவில் வெளியிடுங்கள் என்று ஊடகவியாளர்களை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

TVET தொழில் திறன் கல்வியை இரண்டாம் தர கல்வியாக கருதாமல் இதை பயில இந்திய மாணவர்கள் அதிக அளவில் முன் வர வேண்டும்.

TVET தொழில் திறன் கல்வி இந்திய மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் அதுபற்றி ஊடகவியலாளர்கள் அதிக செய்தியை வெளியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மலேசியர்கள் மத்தியில் குறிப்பாக இந்திய மாணவர்கள் TVET தொழில் திறன் கல்வியை பயில்வது மிகவும் குறைவாக இருக்கிறது.

TVET தொழில் திறன் கல்வியை பயின்றால் அதனால் இந்திய சமுதாய மாணவர்கள் எந்த வகையில் நன்மை அடைவார்கள் என்பது பற்றி ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட்டு உதவும் படி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

TVET தொழில் திறன் கல்வியை பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர் காலம் காத்திருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

ஜனவரி 2024 ஆம் ஆண்டுக்கான TVET தொழில் திறன் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை திறந்திருக்கும்.

விண்ணப்பம் செய்ய விரும்பும் மாணவர்கள் http://https://mohon.tvet.gov.my அகப்பக்கத்தை அணுகலாம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here