புத்ரா ஜெயா லலிதாம்பிகை ஆலய திருப்பணி பூர்த்தி அடைய 50 லட்சம் வெள்ளி தேவை!

கோலாலம்பூர்

புத்ராஜெயாவில் மிகவும் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும் லலிதாம் பிகை ஆலய திருப்பணி வேலைகள் முடிவடைய இன்னும் 50 லட்சம் வெள்ளி தேவைபடுகிறது என்று ஆலய நிர்வாகத்தினர் நேற்று மனிதவள அமைச்சர் சிவகுமாரி டம் தெரிவித்தனர்.

முன்பு தோட்டங்களாக இருந்தபோது இந்த இடத்தில் 12 கோவில்கள் இருந்தன. இப்போது ஒரே மிகப்பெரிய கோவிலாக லலிதாம்பிகை ஆலயம் கட்டப்பட்டு வரு கிறது. புத்ராஜெயாவில் லலிதாம்பிங்கை தாய்க்கு ஆலயம் அமைவது என்பது மிகவும் அற்புதமான விஷயமாகும்.

ஆனால், இந்த ஆலயத்தின் கட்டுமான பணிகள் பல ஆண்டுகளாக இழுபறியாக இருப்பது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. எது எப்படியிருந்தாலும் இந்த ஆல யத்தை கட்டி முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கோவில் திருப்பணி குழு மேற்கொண்டு வருகிறது என்று கட்டடக் குழு தலைவர் தயாளான் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மரியாதை நிமித்தமாக புத்ரா ஜெயா லலிதாம்பிகை ஆலய கட்டட திருப்பணி குழு தலைவர் தயாளான் சுப்பிரமணியம், உதவி தலைவர் விஜயன், செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் அமைச்சர் சிவகுமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் புத்ரா ஜெயா லலிதாம்பிகை ஆலய திருப்பணி வேலைகள் பூர்த்தி அடைய கண்டிப் பாக உதவி கரம் நீட்டுவேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here