அல்லாஹு அக்பர் கோஷத்துடன் யூதர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய விமான நிலையத்தை முற்றுகையிட்ட கும்பல்

விமான நிலையத்திற்குள் பாலஸ்தீனிய கொடிகளை ஏந்திய அந்த கும்பல், இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அல்லது யூதர்கள் என்று நினைத்த பயணிகளை தாக்கியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தாகெஸ்தான் மாகாணத்தில் உள்ள ரஷ்ய நகரமான மகச்சலாவில் உள்ள விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை ஒரு கும்பல் முற்றுகையிட்டது, இஸ்ரேலில் இருந்து ஒரு விமானம் வருவதாக வதந்தி பரவியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

விமான நிலையத்திற்குள் பாலஸ்தீனிய கொடிகளை ஏந்திய அந்த கும்பல், இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அல்லது யூதர்கள் என்று நினைத்த பயணிகளை தாக்கியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்கள் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அந்த கும்பல் கோரியதாகவும் கூறப்படுகிறது..

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தாகெஸ்தான் கவர்னர் உறுதியளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் யூத குடிமக்களை ரஷ்யா பாதுகாக்க வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள முஸ்லீம்கள் இஸ்ரேலில் இருந்து விமானம் வந்து கொண்டிருக்கும் விமான நிலையத்தை புயலால் தாக்கினர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த கும்பலில் இருந்த பலர் “அல்லாஹு அக்பர்”என்று கோஷமிட்டனர், அவர்கள் விமான நிலைய பாதுகாப்பு, கதவுகள் மற்றும் தடைகளை உடைத்து, இஸ்ரேலியர்களையும் யூதர்களையும் ஏற்றிச் செல்லும் விமானத்தின் முன் எதிர்ப்பு தெரிவித்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here