புயலால் சேதமடைந்த SMK முன்ஷி அப்துல்லா பள்ளியின் பழுதுபார்ப்பு செலவு RM3 மில்லியனை எட்டும் என எதிரார்ப்பு

மலாக்கா:

டந்த சனிக்கிழமை பலத்த காற்று, இடியுடன் கூடிய கன மழையின் போது கூரை இடிந்து விழுந்தது உட்பட கடுமையான சேதத்திற்குள்ளான செக்கோலா மெனெங்கா கெபாங்சான் (SMK) முன்ஷி அப்துல்லா பள்ளியிலுள்ள ஆறுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை பழுதுபார்ப்பதற்கான செலவு RM3 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைய ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகும் என்று மாநில பொதுப்பணித் துறை தமக்குத் தெரிவித்ததாகவும், அக்காலப்பகுதியில் பள்ளியின் கற்பித்தல் மற்றும் கற்றல் அமர்வுகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது 2,000 மாணவர்களைப் பாதிக்கும் என்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் டத்தோ அப்துல் ரவூஃப் யூசோ கூறினார்.

இது மாநிலத்தில் அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளி என்பதால், SMK முன்ஷி அப்துல்லா பள்ளியின் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்கும் பணியை மாநில அரசு உறுதி செய்யும் என்றார்.

“இதுவரை, கல்வி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தக்காரரால் ஆரம்ப பழுதுபார்ப்பு பணிகளுக்காக RM100,000 பள்ளிக்கு உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here