சுமுகமாக முடிந்த அவதூறு வழக்கு ; சைஃபுதின் நசுஷனிடம் மன்னிப்பு கேட்டார் ஜூரைடா

கோலாலம்பூர்:

இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் – டத்தோ ஜூரைடா கமாருடினுக்கு இடையேயான அவதூறு வழக் கில், ஜூரைடா உள்துறை அமைச்சரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரி, சமரசம் செய்ததைத் தொடர்ந்து இவ்வழக்கு முடிவுக்கு வந்தது.

“டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பாக, இரு தரப்பினரும் இந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு தீர்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர்.

“எனவே, நான் அளித்த அவதூறு அறிக்கையை வாபஸ் பெறுகிறேன் மற்றும் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜூரைடா கூறினார்.

இந்தத் தீர்வின் விதிமுறைகள் முழுமையானவை ;இறுதியானவை. எந்தத் தரப்பினரும் வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய இயலாது. அதற்காக எந்த செல வும் தெரிவிக்கப்படவில்லை என்று நவ்ப்ரீத் கூறினார்.

டிசம்பர் 8, 2019 அன்று ஒரு ஹோட்டலில் நடந்த இரவு விருந்தின் போது தனது உரையில் பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளருக்கு எதிராக அவ தூறான அறிக்கையை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here