சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் முதல் நகர்ப்புற கொள்கலன் மீன் பண்ணை இன்று தொடங்கப்பட்டது.
தெம்பனிஸ் ரவுண்ட் சந்தை, உணவு நிலையத்துக்குப் பக்கத்தில் தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் கொள்கலன் மீன் பண்ணை அமைந்துள்ளது.
தெம்பனிஸ் நகர மன்றத்துக்குப் பக்கத்தில் உள்ள கப்பல் கொள்கலனில் உள்ள தொட்டிகளில் ‘ஜேட் பெர்ச்’ எனப்படும் ஒருவகை மீன்கள் உள்ளன. அவை 500 முதல் 600 கிராம் அளவுக்கு வளரும்போது சந்தையில் விற்கப்படுவதற்குத் தயாராகும்.
தெம்பனிஸ் ரவுண்ட் சந்தை, உணவு நிலைய வணிகர் சங்கமும் உள்ளூர் மீன் விற் பனையாளர்களும் சேர்ந்து அந்த மீன்களை விற்கும் முயற்சியில் ஈடுபடுவர். கிலோவுக்கு $38 வரை அந்த மீன் விலைபோகும்.
“இந்தப் பண்ணைக்கு உதவ பொதுமக்களிடம் இருந்து எங்களுக்குப் பல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன,” என்று கூறினார். அவ்வளவாக பயன்படுத்தப்படாத இடங்களை அடையாளம் காண்பதன் மூலம் உள்ளூர் பண்ணைத் திட்டங்களுக்கு தெம்பனிஸ் ஆதரவளித்து வருவதாக மசகோஸ் சொன்னார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் படுக்கையறையின் அளவுக்கு இருக்கும் கொள் கலன் மீன் பண்ணை, வழக்கமான பண்ணை முறையைவிட 25 விழுக்காடு கூடுதல் செயல்திறன் மிகுந்தது. இது தவிர வேலைவாய்ப்புகளையும் கல்வி நடவடிக்கை களுக்கு இட வசதியையும் ஏற்படுத்தித் தருவது என சமூகத்துக்கு இதர அனுகூலங் களை இந்தக் கொள்கலன் பண்ணை வழங்கும் என நம்பப்படுகிறது.



















