சொகுசுமாடி குடியிருப்பின் balconyயிலிருந்து ஆடைகளை எடுக்க முயன்ற பல்கலைக்கழக மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு

கோலாலம்பூர்: 
ம்போங் பாருவில் உள்ள ஜாலான் ராஜா அப்துல்லாவில் உள்ள ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பின் 34வது மாடியின் balcony யிலிருந்து தவறி விழுந்து நேற்று இரவு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
18 வயதுடைய மாணவன் கீழே விழுவதற்கு முன் தனது ஆடைகளை தனது குடியிருப்பின் balconyயில் இருந்து எடுக்க முயன்றதாக அறியப்படுகிறது என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் துணை  ஆணையர் நூர் டெல்ஹான் யாஹாயா கூறினார்.
இரவு 8:17 மணிக்கு இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்றும், 39 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. என்றும் கூறினார்.
“இரண்டு சாட்சிகளின் விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், குறித்த மாணவர்  balconyயின் விளிம்பில் விழுந்த ஒரு துணியை எடுக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது அவர் ஒரு மேசையின் மீது ஏறி, அத்துணியை எடுக்க முயன்றபோது அவர் சமநிலையை இழந்து விழுந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் சடலம் விசாரணைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் உள்ள தேசிய தடயவியல் மருத்துவக் கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here