பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினால், அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் -பிரதமர்

புத்ராஜெயா:

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினால், பிரதமர் அல்லது அமைச்சரவை உறுப்பினர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் பிரதமராக இருந்தாலும், நிதியமைச்சராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் சரி, நாட்டின் பணத்தை திருடினாலோ, நாட்டின் செல்வத்தை தவறாக கையாண்டாலோ அவர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமுமின்றி, நாட்டை காப்பாற்ற நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் நடுநிலைமையுடன் செயற்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (MACC ) அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

சமீபத்தில், துன் மற்றும் டான்ஸ்ரீ உட்பட யாருடைய பதவிகளையும் பொருட்படுத்தாமல் MACC ஐ விசாரிக்க நாம் அனுமதிக்க வேண்டும், இல்லையெனில், MACC “சிறிய மீன்களை” மட்டுமே குறிவைப்பதாக சமுதாயத்தால் விமர்சிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here