ஜோகூரில் வெள்ளத்தால் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,153 பேராக குறைந்தது

கோலாலம்பூர்:

ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 385 குடும்பங்களை சேர்ந்த 1,481 பேராக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி 301 குடும்பங்களை சேர்ந்த 1,153 பேராக குறைந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவடடத்தைச் சேர்ந்த அனைவரும் அங்குள்ள 12 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், இன்று நண்பகல் ஏற்கனவே இயங்கி வந்த தற்காலிக நிவாரண மையம் மூடப்பட்டது என்று தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தேசிய பேரிடர் கட்டளை மையத்தின் https://portalbencana.nadma.gov.my/ms/ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 12 நிவாரண மையங்களில் முறையே மிக அதிகமாக் கோத்தா பாருவிலுள்ள 8 நிவாரண மையங்களில் 191 குடும்பங்களை சேர்ந்த 761 பேரும், அதனைத் தொடர்ந்து மெர்சிங்கிலுள்ள 2 நிவாரண மையங்களில் 70 குடும்பங்களை சேர்ந்த 265 பேரும், குளுவாங்கிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 28 குடும்பங்களை சேர்ந்த 84 பேரும், ஜோகூர் பாருவிலுள்ள 1 நிவாரண மையங்களில் 12 குடும்பங்களை சேர்ந்த 43 பேரும் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here