கிள்ளானில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

கிள்ளான்:

கிள்ளானில் ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு ஆணும் அவரது மனைவியும் தடுத்து வைக்கப்பட்டனர்.

பிப்ரவரி 29 அன்று அதிகாலை 2.20 மணியளவில் போலீசார் அவர்களது வீட்டில் சோதனை நடத்தியபோது, திருமணமான தம்பதிகள் போதைப்பொருட்களை பொட்டலங்களாக கட்டிக் கொண்டிருந்தனர் என்று தென் கிள்ளான் OCPD, துணை ஆணையர் ஹூங் ஃபோங் கூறினார்.

குறித்த தம்பதியினரிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சா, 197 கிராம் சியாபு, 793 கிராம் ஹெரோயின், எடை பார்க்கும் இயந்திரம் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக, இன்று (மார்ச் 8) தென் கிள்ளான் போலீஸ் தலைமையகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

“பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் RM60,000 என்றும், குறித்த தம்பதிகள், அந்த வளாகத்தை பேக்கிங் வசதியாகப் பயன்படுத்தியதாக போலீஸ் நம்புவதாகவும்” அவர் கூறினார்.

“அவர்கள் பல மாதங்களாக செயல்படுகிறார்கள் என்றும், கணவருக்கு குற்றவியல் பதிவு உள்ளது என்றும், அவர்கள் உள்நாட்டில் போதைப்பொருள் விநியோகத்தைப் பெறுகிறார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here