புத்ராஜெயா:
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, குறிப்பாக 35ºCக்கு மேல் வெப்பநிலை பதிவாகும் இடங்களில் உள்ள பள்ளிகள் தங்கள் வெளிப்புற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“வெப்ப அலை” தொடர்ந்து நீடிக்கும் நிலைக்கு மாறினால், கல்வி அமைச்சகம் அதன் கீழுள்ள கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்களில் உள்ளபடி, பள்ளிகளை மூடுவது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று, சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் முஹமட் ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.
மேலும் வெப்பமான காலநிலையை நீண்டகாலத்திற்கு நீடிக்குமாயின், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு உடல்நலப்பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.
வெப்ப அலை நிலை என்பது அதிகபட்ச வெப்பநிலை 37°C க்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.