தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் முருகன் மந்திரம்

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள். கலியுகத்திலும் கேட்பவர்களுக்கு கேட்ட வரங்களை தரக் கூடிய உன்னதமான தெய்வமாக விளங்குகிறார் முருகப் பெருமான். நம்பிக்கையுடன் முருகா என ஒருமுறை அழைத்தால், அவர்கள் முன் ஓடி வந்து நிற்கும் தெய்வமாக முருகப் பெருமான் உள்ளார். அவரின் முழு அருளையும் பெறுவதற்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் எந்த குறையும் ஏற்பாடு. முருகனுக்குரிய எந்த மந்திரத்தை தினமும் சொன்னால் தீராத நோயும் தீரும் என பக்தர்களால் சொல்லப்படுகிறது.

தமிழ் கடவுளான முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் 16,000 க்கும் அதிகமான பதிகங்களை பாடி உள்ளார். இவர் அருளிய பதிகங்களின் தொகுப்பே திருப்புகழ் என போற்றப்படுகிறது. முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு ஏற்ற மிகச் சிறந்த வழி திருப்புகழ் பாடிப்பது தான். இதிலுள்ள ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதமான பலன்களையும் தரக் கூடியதாகும். அவ்வளவு ஏன், திருப்புகழ் பாடல்களை முருகனை வேண்டிக் கொண்டு பக்தியுடன் சொல்லி வந்தால் முருகனையே நேரில் தரிசனம் செய்ய முடியும். என்ன நினைத்து வேண்டிக் கொண்டு, அது நிறைவேற வேண்டும் என அதற்குரிய பதிகத்தை தினமும் நடித்து வந்தால் நிச்சயம் நிறைவேறும்.

அப்படி தீராத நோயையும் தீர்த்து வைக்கக் கூடிய திருப்புகழ் பதிகம், தலைவலி மருந்தீடு என துவங்கும் பதிகமாகும். இந்த பதிகத்தை தினமும் ஆறு முறை என்ற வீதத்தில் பக்தியுடன் படித்து வந்தால் எப்படிப்பட்ட நோயும் சரியாகும் என்பது ஆன்றோர் வாக்கு. எப்படிப்பட்ட நோயும் நம்மை நெருங்காமல் காக்கும் தன்மை இந்த பதிகத்திற்கு உண்டு.

நோய் தீர்க்கும் திருப்புகழ் பதிகம் :

தலைவலி மருந்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி…யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும்…விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க…ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை…வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணிந்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமெனனு…மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்…வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு…மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர்…பெருமாளே.

விளக்கம் :


தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, காய்ச்சல், கண்வலி, வயிற்று வலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள் உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து நோய்களும் என்னை அணுகாத வண்ணம் காக்க வேண்டும். நோய் தீர ஒவ்வொரு மருத்துவராக தேடி அலைந்து திரியும் தலையெழுத்தை எனக்கு கொடுக்காமல், பெரிய தவ சீலர்கள் தினமும் வாசனை மலர் கொண்டு போற்றி துதிக்கும் உன்னை வழிபடுவதற்கு, உன்னுடைய திருவடிகளை தந்துருள வேண்டும்.மாயவனின் மருமகனும், சிவனின் மகனும், வள்ளியை மணம் புரிய வந்தவனுமானவனே, பழநியில் பச்சை கற்பூர அலங்காரத்துடன் காட்சி தரும் தேவர்களின் தலைவனே என்னை காத்தருள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here