நூதன முறையில் குழந்தையை சித்ரவதை செய்த தந்தைக்கு 8 ஆண்டு சிறை

ரஷ்யாவில், சூரிய ஒளி மட்டுமே போதும் எனக் கூறி, ஒரு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கூட வழங்காத தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த 44 வயது மேக்சிம், இயற்கையாக விளையும் பொருட்களை மட்டுமே உண்ணும் உணவு முறையை கடைப்பிடித்து வருகிறார். மேலும், இதுதொடர்பாக இணையத்திலும் பல்வேறு தரவுகளையும் பகிர்ந்து வருகிறார்.

இவர் தனக்கு பிறந்த ஆண் பிள்ளைக்கு, உணவு, தண்ணீர் ஏதும் தராமல், சூரிய ஒளி மட்டுமே போதும் எனக் கூறி வளர்த்து வந்தார். சுமார் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்த அந்த ஒரு மாத குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சோச்சி நீதிமன்றம், மேக்சிமுகு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி மிர்னோவாவுக்கு 2 ஆண்டுகள் சீர்த்திருத்த சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here