ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்: 50 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

கீவ்:

ரஷ்யாவின் மின்நிலையங்கள் மீது நேற்று உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. 50 டிரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது.

உக்ரைன் – ரஷ்யா போர் இரண்டு ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. இந்த போரின் தொடக்கத்தில் சற்று பின்தங்கியிருந்த உக்ரைன் தற்போது ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

அதன்ஒரு பகுதியாக உக்ரைன் எல்லையின் மேற்கு பெல்கோரோட் பகுதியில் 26 ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இதேபோல் ரஷ்யாவின் மேற்கு மற்றும் தெற்கில் உள்ள பிரையன்ஸ்க், குர்ஸ்க், துலா, ஸ்மோலென்ஸ்க், ரியாசான், கலுகா உள்பட பல்வேறு இடங்களில் உக்ரைன் ஆளில்லா விமானங்கள் வாயிலாக தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் ரஷ்யாவின் மின்நிலையங்களை குறி வைத்து நடத்தப்பட்டதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைனின் 50 ஆளிலா்லா விமானங்களை ரஷ்ய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here