ரெம்பாவ்:
Nestle Malaysia நிறுவனம் , மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அதன் Milo Sayang Bumi திட்டத்தின் ஒரு பகுதியாக Milo தொட்டிகளைக் கொண்டு செல்ல மின்சார வாகன (EV) டிரக்குகளைப் பயன்படுத்துகிறது.
இந்த முயற்சியானது Swift Haulage Sdn Bhd, Trumas Damai Sdn Bhd, Volvo Trucks மற்றும் Shell Malaysia ஆகிய நிறுவனங்களுடன் இணைந்த ஒரு கூட்டுமுயற்சியாகும், இதற்கு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையின் (RTD) ஆதரவு உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார் .

சிங்கப்பூரில் உள்ள செம்போங் தொழிற்சாலைக்கும் ஜூரோங் தொழிற்சாலைக்கும் இடையே milo வை ஏற்றிச் செல்ல இந்த மின்சார (EV) டிரக்குகளைப் பயன்படுத்துவதாகவும். இந்த முன்முயற்சி மூலமாக ஆண்டுக்கு 1,000 டன்கள் வரை கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
இந்நிலையில் Nestle Malaysiaவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுவான் அரனோல்ஸ் கூறுகையில், இந்த முயற்சியை 100 சதவீதம் நிலையானதாக மாற்றும் நோக்கத்துடன் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நான்கு கூடுதல் EV டிரக்குகளை வாங்க தமது நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றார்.

“2027 ஆம் ஆண்டிற்குள் நிறுவலை முடிக்கும் இலக்குடன், அனைத்து மைலோ மாதிரி டிரக்குகளிலும் சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் இந்த முயற்சி தொடர்ந்து நிலைத்தன்மை பெறும் ,” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தொடங்கி வைத்தார், RTD இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோஸ்பியாகோஸ் தாஹா மற்றும் ரெம்பாவ் நகரசபைத் தலைவர் முகமட் ஜம்ரி முகமட் ஈசா ஆகியோர் கலந்து கொண்டனர்.



















