(கு.அன்பரசன்)
மஇகா தேசிய புத்ரா விளையாட்டு பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினராக தினேஷ் ரத்னம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் தம் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பில் நியமனம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையில் மூன்று ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியை வகிப்பார்.
தம் மீது முழு நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை வழங்கியிருக்கும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கும் மஇகா உயர் நிலை தலைவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தேசிய புத்ரா விளையாட்டு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தமது நன்றியினை அவர் தெரிவித்துக்கொண்டார்.
இந்திய சமுதாய இளைஞர்கள், மலேசியாவில் உள்ள அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் வெற்றிக் கொடியை நாட்டி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்ப்பதை உறுதி செய்வதில் தம்முடைய பங்கு நிச்சயமாக இருக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
மலேசியர்களின் குறிப்பாக இந்தியர்களின் பார்வையில் மஇகா புத்ரா பெயரை உயர்த்தி பெருமைப்படுத்தும் என்பதில் தாம் முழு நம்ப்பிக்கை கொண்டிருப்பதாக தினேஷ் ரத்னம் சொன்னார்.























