ஆடி மாதத்தில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்தாலும் இந்த மாதத்தில் எவற்றை எல்லாம் செய்யலாம், எவற்றை செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. அதே போல் என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதும் பலருக்கும் தெரியாது. புனிதமான ஆடி மாதத்தில் எவற்றை செய்ய வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கான மாதமாக சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் இறை சக்திகள் மற்ற மாதங்களை விட அதிகரித்து காணப்படும் என சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் குல தெய்வ வழிபாடு, கிராம தேவதை வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மாதமாகும். பெண் மாதமான ஆடி மாதத்தை கடக மாதம் என்றும் சொல்லுவதுண்டு. அதனால் தான் இந்த மாதத்தில் சக்தி வழிபாடு சிறப்புடையதாக சொல்லப்படுகிறது. ஆடி மாதத்திற்கு, அதிபதியாக சந்திரன் சொல்லப்படுகிறார். இந்த மாதத்தில் சூரியனில் இருந்த சூட்சுமமான அதிர்வுகள் வெளிப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் இறை வழிபாடு, மந்திர ஜபம் போன்றவை செய்வது மிகச் சிறப்பானதாகும். இந்த மாதத்தில் எந்த முறை வேண்டுமானாலும் இறை வழிபாட்டினை செய்யலாம். எப்படி செய்தாலும் அது பல மடங்கு அதிக பலனை தரும்.

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யக் கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்தெந்த காரியங்களை செய்யலாம், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆடி மாதம் பெருக்கத்திற்கான மாதமாகும். அதே போல் நம்முடைய வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை இறை அருளால் போக்கிக் கொள்ளும் மாதமாகும்.

ஆடி மாதத்தில் செய்யக் கூடாதவைகள் :

* புது வீடு குடி புகுதல், வீடு அல்லது இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதனால் கிரகப்பிரவேசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக் கூடாது.

* ஆடி மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கக் கூடாது.

* ஆடி மாதத்தில் பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை :

* நேர்த்திக்கடன், வழிபாடு ஆகியவற்றை செய்யலாம்.

* தாலி பெருக்கிக் போடலாம். திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம்.

* மந்திர ஜபம், யாகம், ஹோமம் ஆகியவற்றை செய்யலாம்.

* ஆடி மாதம், வாஸ்து புருஷன் நித்திரை விடும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் வீடு கட்டுமான பணிகளை துவங்கலாம்.

* ஆடிப்பெருக்கு அன்று புது வீடு வாங்க அல்லது நிலம் வாங்க முன்பணம் கொடுக்கலாம்.

* குடும்பத்தில் நோய் நொடிகள் நெருங்காமல் இருக்க பெண்கள் ஆடி மாதத்தில் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

* கூழ் காய்ச்சி அனைவருக்கும் கொடுப்பது, உணவு தானம், வஸ்திர தானம் வழங்குவது மிகச் சிறப்பானதாகும்.

* தினமும் மந்திர ஜபம் செய்யலாம். ஆடி மாதத்தில் எந்த மந்திரத்தை ஜபித்தாலும் அது வரும் முழுவதும் ஜபித்த பலனை கொடுக்கும்.

* ஆடிப்பெருக்கு அன்று புது வீடு வாங்க அல்லது நிலம் வாங்க முன்பணம் கொடுக்கலாம்.

* குடும்பத்தில் நோய் நொடிகள் நெருங்காமல் இருக்க பெண்கள் ஆடி மாதத்தில் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

* கூழ் காய்ச்சி அனைவருக்கும் கொடுப்பது, உணவு தானம், வஸ்திர தானம் வழங்குவது மிகச் சிறப்பானதாகும்.

* தினமும் மந்திர ஜபம் செய்யலாம். ஆடி மாதத்தில் எந்த மந்திரத்தை ஜபித்தாலும் அது வரும் முழுவதும் ஜபித்த பலனை கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here