* கோவிந்தா – பசுக்களை இறைவனுக்கு தானமாக கொடுப்பது.
* தேவகி நந்தனா – தேவகியின் மைந்தன்
* ஜெகந்நாதா – அண்ட சராசரங்களுக்கும் தலைவன்
* ஹரி – இயற்கையின் தெய்வம்
* மதுசூதனா – மது என்ற அரக்கனை அழித்தவன்
* பார்த்தசாரதி – பார்த்தனாகிய அர்ஜூனனின் தேரோட்டி
* பரபிரம்மா – உன்னதமான முழுமையான உண்மை
* புருஷோத்தமா – பரமாத்மா
* ஷ்யாம் – இது கிருஷ்ணரின் மற்றொரு பெயர். கருமையான நிறமுடைய கடவுள் என்று பொருள்.
* கோபாலா – இதுவும் கிருஷ்ணரின் திருநாமங்களில் ஒன்று. பசுக்கூட்டத்துடன் விளையாடுபவன் என்று அர்த்தம்.
இது தவிர கேசவா, மாதவா போன்ற திருநாமங்களை சொல்லி அழைத்தாலும் பெருமாள் உடனே ஓடி வருவார். மிகவும் ஆபத்தான சூழலில் இருக்கும் போது ஆதிமூலமே என அழைத்தால், பெருமாளக்கு முன் அவருடைய சுதர்சன சக்கரம் வந்து நம்மை காக்கும். முதலையிடம் சிக்கிக் கொண்ட போது கஜேந்திரன், ஆதிமூலமே என அழைத்தான். கஜேந்திரனை காப்பாற்றி, அவனுக்கு மோட்சம் கொடுப்பதற்காக பெருமாள் வருவதற்கு முன் அவருடைய சுதர்சன சக்கரம் வந்து முதலையை கொன்று, கஜேந்திரனை காத்தது என புராணங்கள் சொல்கின்றன.
ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்திற்கு இணையானவை தான் இந்த திருநாமங்கள். இவற்றில் எந்த ஒரு திருநாமத்தை கூறி எந்த ஒரு பக்தர் உண்மையான பக்தியுடனும், நாம் அழைத்தால் நமக்காக நம்மை காக்க இறைவன் வருவான் என்ற அசைக்க முடியாத திடமான நம்பிக்கையுடனும் கூப்பிடுகிறாரோ, அவர்களின் குரலுக்கு நிச்சயம் பெருமாள் ஓடி வந்து அருள் செய்வார். நம்பிக்கை, உறுதி, பொறுமை தான் பக்தியின் அடிப்படை. அந்த நம்பிக்கையுடன் பிரகலாதன் தூணில் இறைவன் இருக்கிறான் என சொன்ன அடுத்த நொடியே நரசிம்மராக அவதாரம் எடுத்து, தூணிற்குள் புகுந்து, இரணியன் தூணை உடைத்ததும் அதில் இருந்து வெளிப்பட்டார் திருமால்.