கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி; விசாரணை நடத்துவதாக உறுதி

புதுடெல்லி: டெல்லியில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு ஏர் இந்தியா விமானத்தில் (AI 101) சென்றுகொண்டிருந்த பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த நச்சு உணவால் தான் அவதிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து விமானப் பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்ததற்கு, சரியான முறையில் அவர்கள் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து உணவை அவர் காணொளியாக எடுத்துக்கொண்டார்.

சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட இந்தக் காணொளியைத் தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது. கரப்பான் உணவு குறித்து விமான நிறுவனம் அதன் உணவு விநியோகத் துறையிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ள ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

உணவுத் தரத்தை உறுதி செய்வதற்காக முன்னணி உலகளாவிய உணவு விநியோகிப்பாளர்களுடன் விமானநிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here