அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறுவதற்கான அற்புத மந்திரம்

சிவ பெருமானின் அருள் அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம். சிவ பெருமானுக்குரிய திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை நட்சத்திரம் போன்ற நாட்களில் சிவனுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பு. தினமும் மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை நித்ய பிரதோஷ காலம் என்பார்கள். இந்த நேரத்தில் தினமும் வீட்டில் விளக்கேற்றி சிவ மந்திரத்தை சொல்லி வருவதாலும், சிவனை தியானிப்பதாலும் சிவனின் அருளை பெற முடியும்.

சிவ பெருமானுக்குள் அனைத்து மந்திரங்களும், உயர்களும், தெய்வங்களும், அண்ட சராசரங்களும் அடக்கம் என்பார்கள். அதனால் சிவ பெருமானை குறிப்பிட்ட சில மந்திரத்தை சொல்லி வழிபட்டால் சிவன் அருள் மட்டுமின்றி அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆதியும் அந்தமும் இல்லாத சிவனின் அருளை பெற்றாலே அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற்றதற்கு சமம். அதனால் அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைத்து, துன்பங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்றால் சிவனை வழிபட்டாலே போதும்.

சிவனுக்குரிய பஞ்சாட்சர மந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம். இது தவிர நமசிவாய மந்திரத்தை குறிப்பிட்ட சில முறைகளில் சொல்லி வந்தால் அதன் பலன் பல மடங்காக கிடைக்கும். அப்படிப்பட்ட அற்புதமான சிவ மந்திரத்தை தான் இங்கு தெரிந்து கொள்ள உள்ளோம்.

சிவ மந்திரம் :

“ஓம் ஓங்கார நமசிவாய
ஓம் நகாராய நமசிவாய
ஓம் மகாராய நமசிவாய
ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய
ஓம் யகாராய நமசிவாய
ஓம் நம ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வ தேவதா வசீகனாய
சர்வவாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா”

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலை நேரத்தில் கிழக்கு முகமாக அமர்ந்து, 12 முறை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். நம்முடைய வாழ்வில் இருக்கும் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும், பிறர் செய்யும் கெட்ட மந்திரங்கள், செய்வினை, பில்லி, சூனியம் போன்ற ஏவல்கள் ஓடி விடும். மரண பயம் அகலும். இறையருள் நமக்கு துணையாக இருக்க வேண்டும், ஆபத்து நீங்க வேண்டும், துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பவர்கள் தினமும் இந்த மந்திரத்தை சொல்லுவது சிறப்பு. நெருக்கடி காலத்தில் இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here