எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் அந்த காரியத்தில் தடைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக நாம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வோம். காரிய வெற்றியை தரக்கூடியவர் விநாயகர் என்று நம் அனைவருக்குமே தெரியும். விநாயகப் பெருமானுக்கு அடுத்தபடியாக காரிய வெற்றியை தரக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயரே. மிகவும் எளிதில் ஒரு தெய்வத்தின் அருளை பெற முடியும் என்றால் அந்த தெய்வம் ஆஞ்சநேயர் என்றே கூறலாம். ஆஞ்சநேயரை நினைத்துக் கொண்டு ஸ்ரீராமஜெயம் என்ற நாமத்தை கூறிய பிறகு எந்த ஒரு செயலை செய்ய தொடங்கினாலும் ஆஞ்சநேயரின் அருளால் அந்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயரை அவருக்கு உகந்த தினமான ஹனுமன் ஜெயந்தி அன்று வழிபாடு செய்ய வேண்டும். பலரும் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலர் அமாவாசை தினங்களில் செய்வார்கள். இன்னும் சிலர் அவருக்கு உகந்த வியாழக்கிழமை என்று அவரை வழிபாடு செய்வார்கள். எந்த நாளில் வழிபாடு செய்வதாக இருந்தாலும் எப்படி வழிபாடு செய்வதாக இருந்தாலும் ஸ்ரீ ராமா என்று கூறினாலே ஆஞ்சநேயர் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி அன்று வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி வழிபாடு செய்யலாம் என்று இப்பொழுது பார்ப்போம். இந்த வழிபாட்டை டிசம்பர் மாதம் 30ஆம் தேதி முழுவதுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் செய்யலாம். அதிலும் குறிப்பாக மாலை 6:00 மணிக்கு மேல் செய்வது என்பது மிகவும் சிறப்பு.
ஒரு கிழியாத நல்ல வெற்றிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை பன்னீரால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த வெற்றிலையின் நுனியில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதன் காம்பு பகுதி வடக்கு பார்த்தவாறு இருக்குமாறு ஒரு தாம்பாள தட்டில் வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள்.
இந்த தீபம் ஆஞ்சநேயரின் படத்திற்கு முன்பாகவோ சிலைக்கும் முன்பாகவோ இருக்கட்டும். அப்படி இல்லாத அல்லது ராமர், பெருமாள் போன்றவர்களின் படத்திற்கு முன்பாக கூட ஏற்றலாம். பிறகு ஆஞ்சநேயருக்கு பிடித்தமான பொருட்களான வெண்ணெய், இனிப்பு வகைகள், வாழைப்பழம், வடை போன்றவற்றை வைக்கலாம். இவ்வாறு வைத்துவிட்டு ஸ்ரீ ராம ஜெயம் என்னும் மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி மனதார நாம் உச்சரிக்கும் பொழுது ஆஞ்சநேயர் எங்கிருந்தாலும் ஓடோடி வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
பிறகு ஓம் நமோ ஸ்ரீ ஆஞ்சநேய நமக என்னும் மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து முடித்த பிறகு உங்களுக்கு எந்த காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த காரியத்தை கூற வேண்டும். இப்படி நீங்கள் கூறுவதன் மூலம் ஆஞ்சநேயர் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகளை விலக்கி உங்களுக்கு வெற்றியை அருள்வார் என்று கூறப்படுகிறது.
தீபம் எரிந்து முடிந்த பிறகு அந்த வெற்றிலையை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய காரியங்களில் எந்தவித தடைகளும் ஏற்படாது .