காஜாங்:
நேற்று முன்தினம் பந்திங்கில் உள்ள ஒரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த சடலம், இந்த மாத தொடக்கத்தில் செராஸில் காணாமல் போன 15 வயது சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புடையதாக போலீசார் நம்புவதாகவும், அது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டதாகவும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.
குறித்த சடலம் சிதைந்த நிலையில் உள்ளதால் உடனடியாக அதை அடையாளம் காணமுடியாதுள்ளது என்றும், பந்திங் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றும், ம் உடலின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனையின் முடிவுகளுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்,” என்று அவர் இன்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“தற்போது, 16, 20 மற்றும் 51 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவரின் காதலனும் அடங்குவதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக டிசம்பர் 19 அன்று, பத்து 11 செராஸில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் சிங்க நடனப் பயிற்சிக்குப் சென்ற பிறகு, 15 வயதான யாப் சின் யுவான் என்ற இளம்பெண் காணாமல் போனார்.
சடலம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாப்பின் குடும்ப உறுப்பினர்கள் டிஎன்ஏ மாதிரிகளை காவல்துறைக்கு வழங்கியுள்ளனர். இருப்பினும், அவள் பாதுகாப்பாக திரும்பி வந்து தன் குடும்பத்துடன் மீண்டும் இணைவாள் என்று அவர்கள் இன்னும் நம்புகிறார்கள்,” என்றும் அவர் சொன்னார்.