நடிகை ஹனிரோஸ் புகாரில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

கொச்சி,மலையாள நடிகை ஹனி ரோஸ். 2005ம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பலவேறு படங்களில் நடித்து உள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார்.

நடிகை ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அவரின் கவர்ச்சியால் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். பல வணிக நிறுவனங்கள், கடைகள் திறப்புவிழாவில் கலந்து கொள்கிறார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்திற்கு அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளதாக நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில், 30 பேர் மீது கேரளா எர்ணாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓராண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here