அவதூறு மேல்முறையீடு நிலுவையில் உள்ள குவான் எங்-க்கு RM1.4 மில்லியனை செலுத்திய முஹிடின்

கோலாலம்பூர்: யயாசான் அல்புகாரியின் வரி விலக்கு அந்தஸ்து தொடர்பாக லிம் குவான் எங் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக முஹிடின் யாசின்  1.4 மில்லியன் ரிங்கிட்டை  முழுமையாக தீர்த்து வைத்துள்ளார்.  இதில் செலவுத் தொகையும் அடங்கும். பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் ஜனவரி 27 ஆம் தேதி காலக்கெடுவிற்கு முன்னதாக செலுத்த வேண்டிய தொகையான 1 மில்லியன் ரிங்கிட்டை நேற்று தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர் செலுத்தியதாக என்று லிம்மின் வழக்கறிஞர் குவோக் நெக் சியோங் கூறினார். முதல் 400,000 ரிங்கிட் பரிமாற்றம் கடந்த டிசம்பரில் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

டிசம்பர் 16 ஆம் தேதி நீதிபதி ரோஸ் மாவர் ரோசைனிடமிருந்து தீர்ப்பிற்கு நிபந்தனை தடை விதித்து முஹிடினுக்கு உத்தரவிட்டார். தடையின் விதிமுறைகளின்படி, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் 400,000 செலுத்த வேண்டும் என்றும் மீதமுள்ள 1 மில்லியன் ரிங்கிட்டை ஜனவரி 27 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பொறுப்பு, தொகை இரண்டிற்கும் எதிராக முஹிடின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் முஹிடின் முன்னாள் நிதியமைச்சரை அவதூறாகப் பேசியதாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர், நவம்பர் 8 ஆம் தேதி உயர் நீதிமன்றம் லிம்மிற்கு ஆதரவாக 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு, 50,000 ரிங்கிட் செலவுத் தொகையை செலுத்துமாறு தீர்ப்பளித்தது.

லிம் உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) முஸ்லிம் தொண்டு நிறுவனத்தின் வரி விலக்கு அந்தஸ்தை ரத்து செய்ய காரணமாக இருந்ததாகவும், நிதியமைச்சர் என்ற முறையில், அறக்கட்டளைக்கு வரி விதித்ததாகவும், முந்தைய ஆண்டுகளுக்கான வரியில் 45% அபராதம் விதித்ததாகவும் அந்த அறிக்கைகள் கூறின. அந்த நேரத்தில் LHDN தனது அதிகார வரம்பில் இருந்ததால், அறக்கட்டளையின் வரி விலக்கு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான அறிவுறுத்தல்கள் லிம்மிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று கூறி முஹிடின் லிம்மை அவதூறு செய்ததாகவும் கண்டறியப்பட்டது. மூன்று அறிக்கைகளும் லிம் முஸ்லிம்களுக்கு எதிராக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததைக் குறிக்கிறது என்று ரோஸ் மாவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here