ஷாப்பிங் மாலில் மனைவியை அறைந்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர்:

மீபத்தில் கோத்தா வாரிசானில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் தனது மனைவியை அறைந்த ஆடவரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவரின் செயல்களைக் காட்டும் வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரின் சகோதரி புகார் அளித்ததாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நோர்ஹிசாம் பஹாமன் தெரிவித்தார்.

“கணவரால் தாக்கப்பட்ட பெண் தனது 35 வயது மூத்த சகோதரி என்றும், அவரைத் தாக்கிய பாதிக்கப்பட்டவரின் கணவர் 50 வயதுடைய உள்ளூர்வாசி என்றும் ” அவர் திங்கள்கிழமை (ஜனவரி 27) இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும், சந்தேக நபரையும் பாதிக்கப்பட்டவரையும் தீவிரமாகக் போலீசார் தேடி வருவதாகவும் ஏசிபி நோர்ஹிசாம் மேலும் கூறினார்.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 மற்றும் 1994 குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும், இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த எவரும் புலனாய்வு அதிகாரி, துணை கண்காணிப்பாளர் மகாஃபிஸ் மாட் லாவியை 010-2396533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here